Published : 20 Jun 2017 10:05 AM
Last Updated : 20 Jun 2017 10:05 AM
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடும் 13 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய மேற்கிந் தியத் தீவுகள் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை 1-1 என சமனில் முடித்திருந்ததால் தரவரிசை பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னேற்றம் காணாமல் 9-வது இடத்திலேயே நீடிக்கிறது.
ஷனோன் கேப்ரியல் காயம் காரணமாக இம்முறை அணியில் இடம் பெறவில்லை. இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரைச் சந்திக்க உள்ளது.
இரு அணிகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொட ரின் முதல் ஆட்டம் வரும் 23-ம் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் சிறந்த திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொட ருக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி யால் நேரடியாக தகுதி பெற முடியும்.
வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திரா பிஷூ, ஜோனாதன் கார்டர், ராஸ்டன் சேஸ், மிகுவல் கம்மின்ஸ், ஷாய் ஹோப், அல்ஸார்ரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் மொகமது, ஆஸ்லே நர்ஷ், கெய்ரன் பொவல், ரோவ்மான் பொவல், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT