Published : 03 Feb 2015 09:31 AM
Last Updated : 03 Feb 2015 09:31 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருக்கி வரும் நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் முழு உடல் தகுதியுடன் இல்லை.
எனவே முத்தரப்பு போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய சென்றுள்ள மோஹித் சர்மா, குல்கர்னி ஆகியோரை அங்கேயே தங்கியிருக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தடுமாற்றமும்.. பின்னடைவும்…
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ள ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நிலைத்து நின்று விளையாட முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறி வரும் நிலையில், சில வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
11-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்திருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக தொடக்க வீரர் ரோஹித் சர்மா, முத்தரப்ப தொடரின் முதல் போட்டியில் சதமடித்தார். ஆனால் காயம் காரணமாக அடுத்து வந்த போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.
அது இந்திய அணிக்கு பெரும் பின்டைவை ஏற்படுத்தியது. எனவே உலகக் கோப்பை போட்டியிலும் அவரால் விளையாட முடியாமல்போனால் அது ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே இருக்கும்.
உலக கோப்பை போட்டிக்கு ரோஹித் சர்மா அவர் உடல் தகுதி பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ் தானுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா? என்பதில் உறுதி இல்லை. உலகக் கோப்பையில் முதல் போட்டியிலே இந்திய அணிக்கு மிகவும் சவாலாகவும், நெருக்கடியாகும் இருக்கும் ஏனெனில் முதல்போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது. இப்போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற வுள்ளது.
உடல் தகுதி சோதனை
இதேபோல வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு கால் மூட்டில் காயம் ஏற்பட்டு களமிறங்க முடியாத நிலையில் உள்ளார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இதுவரை முழு உடல் தகுதி பெறவில்லை.
அணியில் இடம் பெற்றுள்ள 15 பேரில் 4 பேர் களமிறங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதில் ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வரும் 7-ம் தேதி உடல் தகுதி சோதனை நடைபெறவுள்ளது. இதில் தேர்வு பெற்றால் மட்டுமே அவர்களால் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்க முடியும்.
எனவே முத்தரப்பு தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற மோஹித் சர்மா, குல்கர்னி இந்திய அணியினருடன் ஆஸ்திரேலி யாவில் தங்கியுள்ளனர்.
உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியோடு அவர்களும் தங்கியிருக்க உள்ளனர்.
இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் உடல் தகுதி பெறா விட்டால் மோஹித் சர்மாவும், குல்கர்னியும் அவர்களுக்கு பதிலாக அணியில் இடம் பெறுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT