Published : 14 Mar 2017 10:12 AM
Last Updated : 14 Mar 2017 10:12 AM
பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஜோகோவிச், ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் 46-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கைல் எட்மண்டை வீழ்த்தினார்.
5-ம் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நடால் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் 145-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் கைடோ பெல்லாவைத் தோற்கடித்தார். 9-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 871-ம் நிலை வீரரான பிரான்சின் ஸ்டீபன் ராபர்ட்டை வீழ்த்தினார்.
இதேபோல் 4-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந் தின் டேனியல் இவான்ஸைத் தோற்கடித்தார். 6-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் 19 வயதான 136-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லார் பிரிட் ஸிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
முகுருசா வெற்றி
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கைலா டேவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் குஷ்நட்சோவா, பிரான்சின் கரோலின் கார்சியா, சுலோவேக்கியாவின் டோமினிகா ஷிபுல் கோவா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, உக்ரைனின் எலினா சுவிட்டோலினா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT