Published : 31 Mar 2014 11:03 AM
Last Updated : 31 Mar 2014 11:03 AM
சென்னையில் தேசிய ஜூனியர் ஆடவர் ஏ டிவிசன் ஹாக்கிப் போட்டியில் சாய், ஒடிசா, போபால் ஆகிய அணிகள் வெற்றி கண்டன.
7-3 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிர அணியைத் தோற்கடித்தது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய சாய் அணி 7-3 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரத்தைத் தோற்கடித்தது. சாய் வீரர் பவன் ராஜ்பர் 4 கோல்களை அடித்தார்.
மற்ற ஆட்டங்களில் ஒடிசா அணி 5-0 என்ற கோல் கணக்கில் கர்நாடகத்தை வென்றது. போ பால் அணி 3-3 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கர் அணியுடன் டிரா செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT