Published : 01 Mar 2017 10:42 AM
Last Updated : 01 Mar 2017 10:42 AM
வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் தலைமையில் களமிறங் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி காலே நகரில் தொடங்கு கிறது. ஹராத் தலைமையிலான இலங்கை அணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச தொடருக்கான அணியில், உள்ளூர் போட்டி களில் சிறப்பாக செயல்பட்ட மலின்டா புஷ்பகுமாராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT