Published : 14 Jan 2014 12:57 PM
Last Updated : 14 Jan 2014 12:57 PM
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், இலங்கைக்கு எதிரான போட்டித் தொடருடன் ஓய்வு பெற இருக்கிறார். இப்போட்டி ஜனவரி 19 முதல் 28-ம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 31 வயதாகும் மிதாலி ராஜ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 10 வயது முதலே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர், 1999-ல் இந்திய அணியில் முதல்முறையாக இடம் பிடித்தார். முதல் ஆட்டத்திலேயே 114 ரன்கள் எடுத்தார்.
2001-ல் இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அடுத்த ஆண்டிலேயே தனது 19-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 214 ரன்கள் எடுத்து அதிபட்ச ரன் எடுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் இப்போதும் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.
2005-ம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 2003ம் ஆண்டு அர்ஜூனா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT