Last Updated : 05 Nov, 2014 09:58 AM

 

Published : 05 Nov 2014 09:58 AM
Last Updated : 05 Nov 2014 09:58 AM

கங்குலி உள்ளிட்ட 7 பேரை நீக்க சேப்பல் திட்டமிட்டிருந்தார்: ஹர்பஜன்

சச்சின் தனது சுயசரிதையான 'பிளேயிங் இட் மை வே' என்ற புத்தகத்தில் 2007 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக திராவிடை கேப்டன் பதவியிலிருந்து நீக்க கிரேக் சேப்பல் முயற்சித்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகளை கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, நான் பயிற்சியாளராக இருக்கும் வரை நீங்கள் இந்திய அணிக்காக விளையாட முடியாது என முன்னாள் பயிற்சியாளரான கிரேக் சேப்பல் என்னிடம் தெரிவித்தார். அவர் பயிற்சியாளராக இருந்த தருணம் இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், "இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், "இந்திய கிரிக்கெட்டை சேப்பல் அழித்தார். அதிலிருந்து இந்திய அணி மீள்வதற்கு 3 ஆண்டுகள் ஆனது. அணியில் இருந்த சிலர் தங்களின் ஆதாயத்துக்காக சேப்பலுக்கு தவறான தகவலை அளித்தனர். அது அணியில் பிளவை ஏற்படுத்தியது. தவறான தகவலை அளித்த வீரர்கள் யார் என்பதை நேரம் வரும்போது தெரிவிக்கிறேன்.

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரின்போது போட்டியின் மீது கவனம் செலுத்தாமல் கங்குலியின் அருகில் இருந்து கொண்டு கங்குலி மீதே புகார் தெரிவித்து பிசிசிஐக்கு இ-மெயில் அனுப்பினார் சேப்பல். இது எனக்கு எப்படி தெரியும் என்றால், நான் சேப்பலின் அருகில்தான் இருந்தேன். அவர் கழிவறைக்கு சென்றபோது அவருடைய லேப்டாப்பில் இருந்த தகவலை பார்த்தேன். அப்போது நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

பின்னர் அதை கங்குலியிடம் தெரிவித்தபோது அவரும் அதிர்ச்சியடைந்தார். சவுரவ் கங்குலி, நான் (ஹர்பஜன்), விரேந்திர சேவாக், நெஹ்ரா, ஜாகீர்கான், யுவராஜ் உள்ளிட்ட 7 பேரை அணியில் இருந்து தூக்கியெறிய அவர் திட்டமிட்டிருந்தார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x