Published : 02 Sep 2016 09:51 AM
Last Updated : 02 Sep 2016 09:51 AM
ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ் டெய்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஸ்வெயின்ஸ்டெய்கர் தனது கடைசி சர்வதேச போட்டியில் நேற்று பின்லாந்துக்கு எதிராக களமிறங் கினார். நட்புரீதியிலான இந்த ஆட்டம் ஜெர்மனியின் பிராங்க்புருட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஸ்வெயின்ஸ்டெய்கர் கவுரவிக்கப்பட்டார். அப்போது அவர் கண்களில் கண்ணீர் ததும்பியது. இதையடுத்து அவர் களத்தில் பந்தை ஒவ்வொரு முறை உதைத்த போதும் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.
32 வயதான நடுக்கள வீரரான ஸ்வெயின்ஸ்டெய்கர், கடந்த ஜூலை மாதம் ஐரோப்பிய கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் ஓய்வு பெறும் முடிவை எடுத்தார்.
நேற்றைய ஆட்டத்தில் அவர் 67 நிமிடங்கள் களத்தில் இருந்தார். அதன் பிறகு அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார். ஸ்வெயின்ஸ்டெய்கர் வெளியே வந்தபோது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
ஸ்வெயின்ஸ்டெய்கர் கூறும் போது, "ஜெர்மனி அணிக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன். ஒவ்வொரு விநாடியையும் நான் அனுபவித்து விளையாடினேன்" என்றார்.
பின்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 55-வது நிமிடத்தில் மேக்ஸ் மேயரும், 77-வது நிமிடத் தில் மேசூட் ஓஸிலும் தலா ஒரு கோல் அடிக்க வெற்றியுடன் ஓய்வு பெற்றார் ஸ்வெயின்ஸ்டெய்கர்.
2004-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஸ்வெயின்ஸ்டெய்கர் அறிமுகமானார். இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 0-2 என்ற கோல் கணக் கில் ஹெங்கேரியிடம் தோல்வியை சந்தித்தது. 121 போட்டிகளில் விளை யாடி உள்ள ஸ்வெயின் ஸ்டெய்கர் 24 கோல்கள் அடித்துள்ளார்.
ஸ்வெயின்ஸ்டெய்கர் தலை மையில் ஜெர்மனி அணி கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடை பெற்ற உலகக்கோப்பை தொடரை வென்றது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. ஜெர்மனி அணியுடன் அவரது 12 வருட கால்பந்து பயணம் இத்துடன் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT