Published : 04 May 2017 06:32 PM
Last Updated : 04 May 2017 06:32 PM
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டுக்கு இந்திய அணியைத் தேர்வு செய்யுங்கள் என்று பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் சவுத்ரிக்கு கிரிக்கெட் நிர்வாகிகள் குழு கூறிய போது, அணித்தேர்வுக் குழுவை அழைத்து சிறந்த இந்திய அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து மேலும் நிர்வாகிகள் குழு கூறும்போது, “ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்பது பற்றிய குழப்பங்கள் அளவுக்கும் அதிகமாகச் சென்று விட்டது. எனவே இந்தக் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம்.
கிரிக்கெட் வீரர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டுக்கு அணி நன்றாகத் தயார் செய்துகொள்ள போதிய கால அவகாசம் அளிப்பதற்கு இணங்கள் அணித்தேர்வு நடைபெற வேண்டும்.
இந்திய அணி இன்னும் உச்சத்தில் செல்வதற்கும் மேலும் சாதனைகளை நிகழ்த்துவதற்கும் களம் அமைத்துக் கொடுக்கும் போது அதுவே வருவாயை அதிகரிக்கும்.
ஐசிசி-யில் கருத்தொருமித்தல் மூலமே பிசிசிஐ ஒரு உயரிய நிலையை எட்டியது என்பதை மறந்து சண்டை, சச்சரவுகள் மூலம் அல்ல என்பதை பிசிசிஐ மறந்து விட்டது. மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கும் நேரத்திற்குரிய உதவி கிடைக்க பிசிசிஐ உதவிகரமாக இருக்க வேண்டும். இதன் மூலம் பிசிசிஐ ஒரு உடன்பாடான இமேஜை ஐசிசி-யில் தக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு கிரிக்கெட் நிர்வாகிகள் குழு அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT