Published : 21 Jan 2014 11:40 AM
Last Updated : 21 Jan 2014 11:40 AM
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நீதிபதி முகுல் முத்கல் கமிஷன் நடத்திய விசாரணை அறிக்கை பிப்ரவரி 10-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இத்தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பாளர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் இது தொடர்பாக அப்போது கைது செய்யப்பட்டனர் என்பதும் நினைவுகூரத்தக்கது. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி முத்கல் கமிஷன் முன்னாள் கேப்டன் கங்குலி, பிசிசிஐ முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா ஆகியோரையும் சமீபத்தில் சந்தித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கமிஷன் எந்த ஒரு இறுதி முடிவுக்கும் வரவில்லை. ஊடகங்கள் தாங்களாகவே சில செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கமிஷனின் அறிக்கையில் அனைத்து கேள்விகளுக்கும் விரிவான பதில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT