Last Updated : 01 Sep, 2016 09:02 AM

 

Published : 01 Sep 2016 09:02 AM
Last Updated : 01 Sep 2016 09:02 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் செரீனா, ஆன்டி முர்ரே

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், ஆன்டி முர்ரே ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவருக் கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் 81-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் லூக்காஸ் ரசோலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

டெல் போட்ரோ வெற்றி

3-ம் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் வாவ்ரிங்கா 7-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெர்னான்டோ வெர்டஸ்கோவை யும், ஜப்பானின் நிஷி கோரி 6-1, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பென்ஜமின் பெக்கரையும், 8-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டோமினின் தியம் 6-3, 2-6, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானையும் போராடி வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.

ரியோ ஒலிம்பிக்கில் முன்னணி வீரர்களை கலங்கடித்த அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல் போட்ரோ தனது முதல் சுற்றில் 6-4, 6-4, 7-6 என்ற நேர் செட்டில் சகநாட்டை சேர்ந்த டிகோ ஸ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தினார்.

61 ஏஸ்கள்

ஆடவர் பிரிவில் குரோஷியா வின் இவோ கார்லோவிக் 4-6, 7-6, 6-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் தைவானின் லு யன் சனை வீழ்த்தி னார். இந்த ஆட்டத்தில் கார்லோவிக் 61 ஏஸ்கள் அடித்து சாதனை படைத்தார்.

அமெரிக்க ஓபனில் ஒரு ஆட்டத்தில் அதிகம் அடிக்கப்பட்ட ஏஸ்கள் இதுவாக அமைந்தது. இதற்கு முன்னர் 1999-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபனில் நெதர்லாந்தின் ரிச்சர்டு கிரஜெக் 49 ஏஸ்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 29-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் கேத்ரினான மகரோவாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்றது.

4-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரன்வந்த்ஸ்கா, தகுதி நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவை 6-1, 6-1 என்ற நேர் செட்டிலும், 5-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹலப் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் கிர்ஸ்டென் பிலிப்கென்ஸையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.

செரீனாவின் மூத்த சகோதரி யான வீனஸ் வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் கேத்தர்யானா கோஸ்லோவாவை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் வீனஸ் வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்தார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வீனஸூக்கு இது 72-வது ஆட்ட மாகும். 36 வயதான அவர் இதன் மூலம் அதிக போட்டி களில் பங்கேற்றிருந்த சகநாட்டின் எமி பிரேசரின் சாதனையை முறியத்தார். பிரேசர் 71 கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களில் பங்கேற்றி ருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x