Last Updated : 05 Jan, 2017 09:38 AM

 

Published : 05 Jan 2017 09:38 AM
Last Updated : 05 Jan 2017 09:38 AM

ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ்: 2-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி

ஆக்லாந்து டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலக தரவரிசை யில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ், தனது சகநாட்டை சேர்ந் தவரும் 72-ம் நிலை வீராங்கனை யுமான மேடிசன் பிரிங்கிளை எதிர்த்து விளையாடினார்.

சுமார் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா 4-6, 7-6, 4-6, என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் அரை இறுதியில் தோல்வியடைந்த செரீனா அதன் பின்னர் 4 மாதங்கள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க வில்லை. வரும் 16-ம் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்கு தயாராகும் விதமாக ஆக்லாந்து போட்டியில் செரீனா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x