Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்துக்கு வெண்கலப் பதக்கம்

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நெதர்லாந்து அணி வெண்கலப் பதக்கம் வென்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து 7-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது.

கடந்த உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற நெதர்லாந்து அணி, இந்த உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டதால், 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியாவை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மலேசியா ஒரு கோல் அடிக்க, நெதர்லாந்து இரு கோல்களை அடித்தது. இறுதியில் நெதர்லாந்து 7-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பெனால்டி ஷூட் மூலம் 3-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தைத் தோற்கடித்து 5-வது இடத்தைப் பிடித்தது. பெல்ஜியத்துக்கு 6-வது இடம் கிடைத்தது.

நியூஸிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி 7-வது இடத்தைப் பிடித்தது. கொரிய அணி 8-வது இடத்தைப் பிடித்தது. சனிக்கிழமை நடைபெற்ற 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x