Published : 20 Jul 2016 07:41 PM
Last Updated : 20 Jul 2016 07:41 PM
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இலங்கை லெவன் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.
இலங்கை சரா ஓவலில் நடைபெற்ற இந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணி இன்னிங்ஸ் மற்றும் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது.
அந்த அணியின் இடது கை ஸ்பின் பவுலரும் ஆல்ரவுண்டருமான ஸ்டீவ் ஓ’கீஃப் பேட்டிங்கில் 78 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்ததோடு பவுலிங்கில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இலங்கை முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் ஜெயசூரியா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 245 ரன்கள் பின்னிலயில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை லெவன் அணி இன்று 83 ரன்களுக்குச் சுருண்டது.
3-வது நாளான இன்று 33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை லெவன். ஓ’கீஃப் 6.5 ஓவர்களில் 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் நேதன் லயன் மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இடது கை ஸ்பின்னரான ஓ’கீஃப் வலது கை பேட்ஸ்மென்களுக்கு எதிராக சிறப்பாக வீசினார். குறிப்பாக அசேலா குணரத்னவுக்கு ஒரு பந்தை லெக் அண்ட் மிடில் பிட்ச் ஆக்கி நன்றாகத் திருப்ப ஆஃப் ஸ்டம்பைப் பதம்பார்த்ட பந்து அருமை. அதே ஓவரில் ஷேகன் ஜெயசூரியா ஸ்வீப்பில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
தசுன் ஷனகா ஓ’கீஃபிடம் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மீதி 2 விக்கெட்டுகள் நேர், வேகபந்துகளுக்கு விழுந்தது. ஓ’கீஃப் இந்த போட்டியில் 64 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து இவரது ஆல்ரவுண்ட் திறமைக்காக முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT