Published : 27 Jul 2016 08:57 AM
Last Updated : 27 Jul 2016 08:57 AM
ஆசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற ஈரோடு மாணவர் ரோஷன், உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
ஈரோடு நகர காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் டி.சிலார் என்பவரின் மகன் எஸ்.ரோஷன் (9). பவானியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரோஷன், கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசிய அளவிலான 69 செஸ் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளியுள்ளார்.
சமீபத்தில் ஈரானில் நடைபெற்ற ஆசிய அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்ற ரோஷன் ஒன்பது வயதுக்குட்பட் டோருக்கான பிரிவில் ‘ரேபிட்’ சுற்றில் தங்கப்பதக்கமும், ‘கிளாசிக்’ சுற்றில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். இந்த போட்டியில் 20 நாடுகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
இளம் வயதிலேயே சாதனைப் படிக்கட்டுகளில் ஏறத்துவங்கி யுள்ள ரோஷனின் வளர்ச்சிக்கு பொருளாதார நெருக்கடி ஒரு தடையாக உள்ளதாக குறிப்பிடும் அவரது பெற்றோர், தமிழக அரசோ, தனியார் நிறுவனங் களோ ரோஷனின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் உதவிகள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT