Published : 04 May 2017 09:04 AM
Last Updated : 04 May 2017 09:04 AM
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட அரை இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் உள்ள சான்டிகோ பெர்னாபியு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் முதல் கோலை அடித்தது. காஸ்மிராவின் கிராஸை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அற்புதமாக இந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
73 மற்றும் 86-வது நிமிடத்தில் எதிரணியின் பலவீனமான தடுப்பு அரண்களை பயன்படுத்தி ரொனால்டோ மேலும் இரு கோல்கள் அடிக்க முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் ரொனால்டோ தொடர்ச்சியாக 2-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். அவர், கால் இறுதியில் பேயர்ன் முனிச் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார்.
இரண்டு கட்ட கால் இறுதியிலும் அவர் மொத்தம் 5 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். சாம்பி யன்ஸ் லீக் தொடரில் இதுவரை ரொனால்டோ 103 கோல்கள் அடித்துள்ளார். இதில் 52 கோல்கள் நாக் அவுட் சுற்றில் அடித்தவையாகும்.
மேலும் இந்த சீசனில் ரொனால் டோ இதுவரை 10 கோல்கள் அடித் துள்ளார். இந்த வகையில் பார்சி லோனா வீரர் லயோனல் மெஸ்ஸி 11 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். பார்சி லோனா அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தை பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே அட்லெடிகோ அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்திருந்த மெஸ்ஸியின் சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். இருவரும் தலா 7 முறை ஹாட்ரிக் கோல் அடித் துள்ளனர்.
முதல் கட்ட அரை இறுதியில் 3-0 என ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த இரு அணிகளும் 2-வது கட்ட அரை இறுதியில் வரும் 11-ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் அடிக்கப்படும் கோல்களின் சராசரி விகிதப்படி இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி முடிவாகும்.
தற்போதைய நிலையில் ரியல் மாட்ரிட் 3 கோல்கள் அடித்துள்ள தால் 2-வது கட்ட போட்டியில் அட்லெடிகோ அணியை 2 கோல் களுக்கு மேல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டாலே இறுதிப் போட்டியில் கால்பதித்து விடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT