Published : 17 Mar 2014 11:24 AM
Last Updated : 17 Mar 2014 11:24 AM

குஸ்பிர் கௌர் தேசிய சாதனை

ஜப்பானின் நோமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய அளவிலான 20 கி.மீ. நடைப் போட்டியில் இந்திய வீராங்கனை குஸ்பிர் கௌர் 1 மணி நேரம், 33 நிமிடம், 37 விநாடிகளில் இலக்கை எட்டி 3-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவர் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

இதேபிரிவில் சீனாவின் டாங்மெய் ஜௌ (1:31:58) முதலிடத்தையும், ஜப்பானின் ரெய் இனோவ் (1:32:56) 2-வது இடத்தையும் பிடித்தனர். ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் குர்மீத் சிங் (1:21:30) 3-வது இடத்தைப் பிடித்தார். இந்தப் பிரிவில் கொரியாவின் ஹியூன்சப் கிம் (1:19:24) முதலிடத்தையும், ஜப்பானின் யூசுகே சுஸுகி (1:21:01) 2-வது இடத்தையும் பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x