Published : 27 Feb 2014 10:34 AM
Last Updated : 27 Feb 2014 10:34 AM
32 அணிகள் பங்கேற்கும் 4-வது தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வரும் மார்ச் 13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 32 அணிகளும் ஏ, பி என இரு டிவிசன்களாகப் பிரிக்கப்படுகின்றன. பி டிவிசன் போட்டிகள் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையும், ஏ டிவிசன் போட்டிகள் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு டிவிசனில் உள்ள 16 அணிகளும் தலா 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
பி டிவிசனின் தொடக்க ஆட்டத்தில் அசாம் மற்றும் கோவா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி மார்ச் 20-ம் தேதி நடைபெறுகிறது. ஏ டிவிசனின் தொடக்க ஆட்டத்தில் ஹரியாணா மற்றும் ஒடிசா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி மார்ச் 23-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியின்போது ஹாக்கி இந்தியா தேர்வுக் குழுவினர், அரசின் பார்வையாளர், பயற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டி உள்ளிட்ட பெரிய போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு வீராங்கனைகளை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT