Published : 13 Apr 2017 05:21 PM
Last Updated : 13 Apr 2017 05:21 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் காயமடைந்த விராட் கோலி காயத்திலிருந்து குணமடைந்த காரணத்தினால் வெள்ளியன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் களமிறங்குகிறார்.
வலது தோள் காயத்திலிருந்து அவர் முழுதும் குணமடைந்து விட்டதாகவும் அடுத்த போட்டியில் களமிறங்குகிறார் என்றும் பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்த விராட் கோலி பந்து வீச்சை மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரட்டினார். ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியுற்றது. எனவே கோலி திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
கடந்த ஐபிஎல் தொடரில் 973 ரன்களை 81.08 என்ற சராசரியின் கீழ் 152 ரன் ஸ்ட்ரைக் ரேட்டுடன் எடுத்த கோலி அதிக ரன்களை குவித்தவராகத் திகழ்ந்தார்.
டிவில்லியர்ஸ் அன்று காட்டடி தர்பாரில் இறங்கியுள்ள நிலையில் விராட் கோலியின் வரவு ஆர்சிபிக்கு புதிய பலத்தைக் கூட்டும் என்பதோடு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய இடர்பாடு எழுந்துள்ளது, காரணம் முதல் போட்டியில் விராட்கோலி நிச்சயம் அதிரடி காட்ட முனைப்புடன் களமிறங்குவார் என்பதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT