Published : 16 Jul 2016 02:27 PM
Last Updated : 16 Jul 2016 02:27 PM
தொடக்க வீர்ராகக் களமிறங்கி அதிக ரன்களைக் குவித்ததற்கான சுனில் கவாஸ்கர் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் முறியடித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த குக், மொகமது ஆமிர் பந்தில் பவுல்டு ஆனார்.
இவர் மொகமது ஆமிர் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பிய 61 ரன்களுக்குச் சென்ற போது கவாஸ்கர் சாதனை முறியடிக்கப்பட்டது.
இதில் தொடக்க வீரராக சுனில் கவாஸ்கர் எடுத்திருந்த 9,607 ரன்கள் என்ற சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்து தற்போது 9,630 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.
123 டெஸ்ட் போட்டிகளில் 26 சதங்களுடன் 46.52 என்ற சராசரியின் கீழ் அலிஸ்டர் குக் தொடக்க வீரராக மட்டும் 9,630 ரன்களை எடுத்துள்ளார்.
தொடக்க வீரராக அதிக ரன்கள் எடுத்த வீர்ர்கள் பட்டியல்:
அலிஸ்டர் குக் 123 போட்டிகள் சராசரி 46.52., 26 சதங்கள்
சுனில் கவாஸ்கர் 119 போட்டிகள் 9,607 ரன்கள் சராசரி 50.29., 33 சதங்கள்.
கிரேம் ஸ்மித் 114 போட்டிகள் 9,030 ரன்கள் சராசரி 49.07, 27 சதங்கள்.
மேத்யூ ஹெய்டன் 103 போட்டிகள் 8,625 ரன்கள், சராசரி 50.73, 30 சதங்கள்
விரேந்திர சேவாக் 99 போட்டிகள், 8,207 ரன்கள், 50.04 சராசரி, 22 சதங்கள்
ஜெஃப்ரி பாய்காட் 107 போட்டிகள், 8091 ரன்கள், சராசரி 48.16, 22 சதங்கள்
கிரகாம் கூச் 100 போட்டிகள், 7,811 ரன்கள், சராசரி 43.88, 18 சதங்கள்
மார்க் டெய்லர் 104 போட்டிகள், 7,525 ரன்கள், சராசரி 43.49, 19 சதங்கள்
கார்டன் கிரீனிட்ஜ் 107 போட்டிகள் 7,488 ரன்கள் 45.10 சராசரி, 19 சதங்கள்
மைக் ஆர்தர்டன் 108 போட்டிகள் 7,476 ரன்கள் சராசரி 39.14., 16 சதங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT