Published : 15 Mar 2014 10:53 AM
Last Updated : 15 Mar 2014 10:53 AM
ஸ்விஸ் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சர்வதேச தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் சிந்து தனது 2-வது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 19-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் கனடாவின் மிச்செலே லீயை தோற்கடித்தார். சிந்து தனது காலிறுதியில் சீனாவின் வாங் ஷிக்ஸியானை சந்திக்கிறார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-7, 21-13 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் சஷினா விக்னேஷ்வரனை தோற்கடித்தார். சாய்னா தனது காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் இகன் வாங்கை சந்திக்கிறார். இதுவரை இவர்கள் இருவரும் 7 முறை மோதியுள்ளனர்.
அதில் இகன் வாங் 6 முறை வெற்றி கண்டுள்ளார். இந்தியாவின் காஷ்யப் 21-23, 21-9, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் பெரினோ ஜியான் வாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக சீன தைபேவின் டியன் சென் சௌவை சந்திக்கிறார் காஷ்யப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT