Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, காஷ்யப் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சிந்து தனது காலிறுதியில் 21-17, 21-15 என்ற நேர் செட்களில் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியனான சீனாவின் ஷிக்ஸியான் வாங்கை தோற்கடித்தார். இதுவரை 3 முறை வாங்குடன் மோதியுள்ள சிந்து, அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார்.
இந்திய வீரர் காஷ்யப் தனது காலிறுதியில் 21-15, 21-23, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் டியன் சென் சௌவை தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தார். அடுத்தாக சீனாவின் ஹுவெய் டியானை சந்திக்கிறார் காஷ்யப்.
அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால் 17-21, 2-21 என்ற நேர் செட்களில் சீனாவின் இகன் வாங்கிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT