Published : 31 Mar 2017 10:07 AM
Last Updated : 31 Mar 2017 10:07 AM
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஸ்பெயினின் ரபேல் நடால் அரை இறுதிக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் 13-ம் நிலை வீரரான அமெரிக் காவின் ஜேக் சோக்கை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்றது.
மற்றொரு கால் இறுதி ஆட்டத் தில், போட்டி தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷி கோரி 4-6, 2-6 என்ற நேர் செட்டில் 40-ம் நிலை வீரரான இத்தாலியின் பபியோ போக்னியிடம் தோல்வி யடைந்தார். அரை இறுதியில் நடால் - போக்னி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
போக்னியுடன் இதுரை நடால் 10 ஆட்டங்களில் மோதி உள்ளார். இதில் 7 முறை நடால் வெற்றி பெற்றுள்ளார். 3 முறை தோல்வியை சந்தித்திருந்தார். 30 வயதான நடால், மியாமி ஓபனில் 4 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரை இறுதியில் நடால் வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் மோத வாய்ப் புள்ளது. ரோஜர் பெடர் தனது கால் இறுதி ஆட்டத்தில் செக் குடிரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதுகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் முதல் நிலை வீராங் கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் 11-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம் ஸிடம் தோல்வியடைந்தார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத் தில் 10-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா 3-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹலப்பை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் - ஹோன்டா மோதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT