Published : 14 Aug 2015 04:29 PM
Last Updated : 14 Aug 2015 04:29 PM
கால்லே டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களைப் பிடித்து இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே புதிய சாதனை புரிந்துள்ளார்.
இந்தியாவின் யஜுவேந்திர சிங் என்ற விக்கெட் கீப்பர் அல்லாத பீல்டர் ஒருவர் இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 7 கேட்ச்களை பிடித்து சாதனை புரிந்திருந்தார். ஆனால் யஜுவேந்திர சிங்குக்கு அது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது இந்தச் சாதனையை ரஹானே முறியடித்து 8 கேட்ச்களை கால்லே டெஸ்ட் போட்டியில் இதுவரை பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஹர்பஜன் வீசிய பந்தை ஜெஹன் முபாரக் ஆடிய போது விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது இது அவர் பிடித்த 7-வது கேட்ச்.
சற்று முன் ரங்கனா ஹெராத் 1 ரன்னில் அமித் மிஸ்ரா பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதுவே சாதனையான 8-வது கேட்ச் ஆகும். ஆனால் இந்த அவுட்டிலும் சந்தேகம் உள்ளது, தொடை காப்பில் பட்டுச் சென்றது போல் தெரிந்தது. ஆனால் நடுவர் கையை உயர்த்தினார், ரஹானே சாதனை புரிந்தார்.
இதற்கு முன்பாக 7 கேட்ச்களை ஒரு டெஸ்ட் போட்டியில் பிடித்த பீல்டர்கள் விவரம்:
கிரெக் சாப்பல் 1974-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 கேட்ச்களை பிடித்தார்.
1977: இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூருவில்
யஜுவேந்திர சிங் 7 கேட்ச்களை பிடித்த முதல் இந்திய வீரரானார்.
1993: நியூஸிலாந்துக்கு எதிராக இலங்கை வீரர்
ஹஷன் திலகரத்னே.
1997: ஜிம்பாப்வேவுக்கு எதிராக நியூஸிலாந்தின்
ஸ்டீஃபன் பிளெமிங்.
2004:
மேத்யூ ஹெய்டன் 2004-ல் கால்லே டெஸ்டில் இலங்கைக்கு எதிராக 7 கேட்ச்களை எடுத்துள்ளார்.
தற்போது ரஹானே முதல் இன்னிங்ஸில் கருண ரத்னே, திரிமானே, சந்திமால் ஆகியோர் கேட்ச்களை பிடித்து பிறகு 2-வது இன்னிங்ஸில் பிரசாத், சங்கக்காரா, திரிமானே, முபாரக், ஹெராத் ஆகியோர் கேட்ச்களை பிடித்து 8 கேட்ச்கள் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT