ஸ்விஸ் இன்டோர்ஸ் டென்னிஸ் டெல் போட்ரோவிடம் ஃபெடரர் தோல்வி

ஸ்விஸ் இன்டோர்ஸ் டென்னிஸ் டெல் போட்ரோவிடம் ஃபெடரர் தோல்வி

Published on

ஸ்விஸ் இன்டோர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனா வீரர் மார்டின் டெல் போட்ரோவிடம் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தோல்வியடைந்தார்.

சர்வதேச தரவரிசையில் போட்ரோ 5-வது இடத்திலும், ஃபெடரர் 6-வது இடத்திலும் உள்ளனர்.

ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 7-6 (7/3), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் போட்ரோ வெற்றி பெற்றார். இப்போட்டி 2 மணி 20 நிமிட நேரத்திற்கு நீடித்தது.

இதன் மூலம் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஸ்விஸ் இன்டோர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஃபெடரரைத் தோற்கடித்து போட்ரோ சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் ஏற்கெனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஃபெடரர், இப்போது 6-வது முறையாக பட்டம் வெல்லும் நோக்குடன் களமிறங்கினார். ஆனால் அவரது கனவை போட்ரோ சிதறடித்தார்.

கடைசியாக ஃபெடரருடன் மோதிய 3 ஆட்டங்களிலும் போட்ரோ வென்றுள்ளார். இந்த சீசனில் அவர் வென்றுள்ள 4-வது பட்டம் இது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in