Published : 13 Oct 2014 09:07 AM
Last Updated : 13 Oct 2014 09:07 AM

வண்ணமயமாகத் தொடங்கியது ஐஎஸ்எல் கால்பந்து: முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

இண்டியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆர்பிஜி நிறுவன துணைத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா, அகில இந்திய கால்பந்து சம்மே ளன தலைவர் பிரபுல் படேல், கால் பந்து விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் தலைவர் நீடா அம்பானி ஆகியோர் இணைந்து ஐஎஸ்எல் தொடர் தொடங்குவதை முறைப்படி அறிவித்தனர்.

தொடக்க விழாவையொட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் லேசர் ஒளி விளக்கு அலங்காரங்களுடன் நடைபெற்றன. இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடனமாடினார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், ரண்பீர் கபூர், ஜான் ஆபிரஹாம், நடிகை பர்ணிதி சோப்ரா உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் நடைபெறும் இப்போட்டியில் சென்னையின் எப்சி, அட்லெடிகோ கொல்கத்தா, எப்சி கோவா, எப்சி புனே சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், டெல்லி டைனமோஸ் எப்சி ஆகிய 8 அணிகள் பங்கேற் கின்றன. வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் 61 ஆட்டங்கள் நடக்கின்றன.

கொல்கத்தா- மும்பை

முதல் போட்டியில் கொல்கத்தா மும்பை அணிகள் மோதின. விறுவிறுப்பாகச் சென்ற முதல் பாதி ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோல் அடித்து, முன்னிலை பெற்றது.

கொல்கத்தா அணியின் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிக்ரு டெபர்ரா, சக வீரர் ஸ்பெயினைச் சேர்ந்த ஜோப்ரி மாட்யூ கடத்திக் கொடுத்த பந்தை, அற்புதமாக மும்பையின் கீப்பர் சுப்ரதா பாலை ஏமாற்றி கோலாக மாற்றினார்.

இதன்மூலம் ஐஎஸ்எல் தொடரின் முதல் கோலை அடித்த வீரர் என்ற பெருமையை பிக்ரு டெபர்ரா பெற்றார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், 68-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் மத்தியக் கள வீரர், ஸ்பெயினைச் சேர்ந்த போஜ்ரா பெர்னாண்டஸ் தனது அணிக்கான 2-வது கோலை அடித்தார்.

அதன் பின்னர், மும்பை அணி அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்த போதும், கொல்கத்தா அணியின் கோல்கீப்பர் சுபாஷிஷ் ராய் சவுத்ரி அவற்றை அற்புதமாகத் தடுத்தார்.

மூன்று நிமிடங்கள் அளிக் கப்பட்ட கூடுதல் நேரத்தில், ஆட்டம் முடிய சில நொடிகளே இருந்த போது ஸ்பெயினைச் சேர்ந்த அர்னல் லிபர்ட்

கோண்டே கார்போ கொல்கத்தா அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். இதன் மூலம் மும்பையை 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x