Published : 11 Jun 2016 04:01 PM
Last Updated : 11 Jun 2016 04:01 PM
ஜிம்பாப்வே தொடருக்கு தோனி தலைமையில் அனுபவமற்ற புதுமுக வீரர்களைத் தேர்வு செய்து அனுப்பியுள்ளமை அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர் மகாயா நிடினியிடத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஜிம்பாப்வேயிற்கு இரண்டாம் நிலை அணிகளை அனுப்புவது குறித்து அவர் வருத்தமடைந்துள்ளார். முன்னால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான மகாயா நிடினி, ஜிம்பாப்வே அணியை மேன்மையுறச் செய்வதில் தற்போது முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறார்
இந்நிலையில் இன்று காலை போட்டி தொடங்கும் முன் நிடினி கூறியதாவது:
“நாங்கள் வலுவான அணியுடன் விளையாடுவதை விரும்புகிறோம். இங்கு நாங்கள் புதிய சூழலை உருவாக்கி வருகிறோம். இந்த நாடு அதிக கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவதை உறுதி செய்ய தீவிரமாக விரும்புகிறோம்.
எனவே நீங்கள் அனுப்பும் அணி வலுவான அணியாக இல்லாத போது நாங்கள் அந்த அணிக்கு கடும் சவால்களை அளிப்போம், அதன் பிறகு அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் சென்று வலுவான அணியை ஜிம்பாப்வேவுக்கு அனுப்ப வேண்டிய தேவையுள்ளது பற்றி தெரிவிக்க வேண்டும்” என்றார்.
பொதுவாக கிரிக்கெட் மேம்பாட்டு பயணங்களாகவே இவை இருக்கும் போது வளரும் அணி, அல்லது மறுகட்டுமான கட்டத்தில் இருக்கும் அணியை ஊக்குவிக்க வலுவான வீரர்களுக்கு எதிராக ஆடி அவர்கள் ஊக்கம்பெறச் செய்வதுதான் முறை என்றும், இளைஞர்கள் இந்தியாவின் சிறந்த டாப் வீரர்கள் அங்கு வந்து ஆடுவதைப் பார்க்கும் போதுதான் தாங்களும் அப்படி ஆட வேண்டும் என்ற தூண்டுதல் பெறுவார்கள் எனவே எந்த ஒரு பலவீனமான அணிக்கு எதிராகவும் முக்கிய கிரிக்கெட் அணிகள் தங்கள் வலுவான அணியை அனுப்புவதே நல்லது, மேலும் இதில் ஆட்டத்தின் முடிவுகள் பற்றி பரிசீலிக்கத் தேவையில்லை என்றே கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT