Published : 22 Apr 2017 09:44 AM
Last Updated : 22 Apr 2017 09:44 AM
ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டிகள் சீனாவில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் இரு கட்டங்கள் வரும் 24-ம் தேதி ஜியாசிங் நகரிலும், 27-ம் தேதி ஜின்ஹூவா நகரிலும், கடைசி இருகட்ட போட்டிகள் 30-ம் தேதி சீன தைபேவிலும் நடைபெறு கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி டூட்டி சந்த் தலைமையில் களமிறங்கும் என இந்திய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்துள்ள முகமது அனாஸ் மற்றும் 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டரில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பூவம்மா ராஜூ ஆகியோர் கடைசி கட்ட போட்டிகளின் போது இந்திய அணியினருடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் சீன அரசு இதுவரை விசா வழங்கவில்லை. ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் விவரம் பின்வருமாறு:
ஆடவர்:
வித்யாசாகர் சித்தரஞ்சனயகா (100 மீட்டர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன் (400 மீட்டர் ஓட்டம்), ராகேஷ் பாபு (டிரிப்பிள் ஜம்ப்), ஓம் பிரகாஷ் சிங் (குண்டு எறிதல்), நீரஜ் சோப்ரா, ரவீந்தர் சிங் (ஈட்டி எறிதல்).
மகளிர்:
டூட்டி சந்த், ரீனா ஜார்ஜ் (100 மீட்டர் ஓட்டம்), டின்டு லூகா (800 மீட்டர் ஓட்டம்), நீனா வரஹில் (நீளம் தாண்டுதல்), ஜினு மரியா (உயரம் தாண்டுதல்), மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT