Published : 03 Mar 2017 10:07 AM
Last Updated : 03 Mar 2017 10:07 AM
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தற்போது இந்திய டெஸ்ட் தொடரில் வர்ணணையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பெங்களூரு நகருக்கு சென்ற அவருக்கு ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இதையடுத்து சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றை நிறுத்திய அவர், டிரைவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவரும், கிளார்க் குக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுத்தார். பின்னர் சிறிது தூரம் ஆட்டோவை ஓட்டி பார்த்து கிளார்க் மகிழ்ச்சியடைந்தார்.
இதுதொடர்பான வீடியோவை கிளார்க் தனது முகநூல் பக்கத் தில் பகிர்ந்துள்ளார். 22 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவை லட்சக் கணக்கானோர் பார்வையிட்டுள் ளனர். 35 வயதான கிளார்க் தனது முதல் டெஸ்ட் போட்டியை பெங்களூருவில் தான் விளை யாடினார். இதை நினைவு கூறிய அவர், ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் திரும்பி வந்துள்ளது சிறப்பான விஷயம் என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT