Published : 23 Jun 2017 09:51 AM
Last Updated : 23 Jun 2017 09:51 AM
ஏகான் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 7-6, 4-6, 10-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ், பின்லாந்தின் ஹென்றி காண்டினென் ஜோடியை வீழ்த்தியது.
லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி சாலஞ்சர் போட்டியின் கால் இறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், கனடாவின் அடில் சம்சுதீன் ஜோடி 7-6 , 6-2 என்ற நேர் செட்டில் சிலியின் ஹன்ஸ் போட்லிபிக், பெல்லாரசின் ஆண்ட்ரே வசிலெவ்ஸ்கி ஜோடியை வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT