Last Updated : 27 Oct, 2014 02:43 PM

 

Published : 27 Oct 2014 02:43 PM
Last Updated : 27 Oct 2014 02:43 PM

தெ.ஆ. கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுட்டுக்கொலை

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கோல்கீப்பர் சென்ஸோ மெயீவா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜொகான்னஸ்பர்க் அருகே உள்ள வாஸ்லூரஸ் என்ற ஊரில் அவரது வீட்டில் நேற்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த 2 மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பேர் துப்பாக்கியுடன் நுழைய ஒருவர் வீட்டு வாசலில் காவலுக்கு நின்றார். துப்பாக்கியால் மெயீவாவை சுட்டுக் கொன்ற பிறகு 3 பேரும் தப்பிச் சென்றனர்.

கொலையாளிகள் பற்றிய தகவல்களைத் தெரிவித்தால் 14,000 டாலர்கள் அளிக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்கக் காவல்துறை அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க கேப்டனும், கோல் கீப்பருமான சென்ஸோ மெயீவா வீட்டில் கொலையாளிகள் 7 பேர் இருந்ததாக போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகளுக்கும் மெயீவாவுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

குற்றங்கள் பெருகி வரும் தென் ஆப்பிரிக்காவில் இந்தக் கொலைக்கான காரணம் என்னவென்பதை காவல்துறையினரால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த 3 நாட்களில் தென் ஆப்பிரிக்கா தனது 2-வது முக்கிய விளையாட்டு வீரரை இழந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 800மீ தடகள உலக சாம்பியன் மபுலேனி மலவ்ட்சி கார் விபத்தில் பலியானார்.

தற்போது அந்த நாட்டின் கால்பந்து அணி கோல் கீப்பரும் கேப்டனுமான மெயீவா சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள்து.

கொலையாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று தென் ஆப்பிரிக்க காவல்துறை கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x