Last Updated : 20 Oct, 2014 09:38 PM

 

Published : 20 Oct 2014 09:38 PM
Last Updated : 20 Oct 2014 09:38 PM

லார்ட்ஸில் டி-சர்ட்டைக் கழற்றி சுழற்றியது தவறுதான்: கங்குலி

2002-ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்தை வென்ற பிறகு தனது சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி.

அப்போது அது ஒரு சர்ச்சையைக் கிளப்பினாலும் அதற்கு முந்தைய தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் பயணம் செய்து ஒருநாள் தொடரை சமன் செய்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளிண்டாப் தனது சட்டையை மைதானத்திலேயே கழற்றினார்.

பிளிண்டாஃபின் இந்தச் செயலுக்கு பதிலடியாக கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையைக் கழற்றி ஆக்ரோஷமாகச் சுழற்றியதாகவே அப்போது பார்க்கப்பட்டது.

இந்நிலையில், "2002-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தை வென்ற பிறகு, நான் லார்ட்ஸ் மைதானத்தின் என டி-சர்டை கழற்றி ஆக்ரோஷமாக சுழற்றியது தவறுதான். கடுமையான நெருக்கடியில் இருந்து விடுபட்ட வேகத்தில் அவ்வாறு நடந்து கொண்டேன்." என்று கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வாய்ப்பு பற்றி...

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு சவால்மிக்கதுதான். எனினும் தோனி தலைமையில் நமது அணி அனைத்து நெருக்கடிகளையும் சமாளிக்கும்.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டம் ஒரு சார்பானதாகவே அமைந்துவிட்டது. ஆனால் இப்போதுள்ள இந்திய அணி எவ்வித நெருக்கடியையும் எதிர்கொண்டு விளையாடும் திறமையுடையது.

எனவே ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் சமாளித்து விளையாடும். எனவே அனைத்து அணிகளுக்கும் நமது வீரர்கள் சவாலாக இருப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x