Published : 06 Jul 2016 04:25 PM
Last Updated : 06 Jul 2016 04:25 PM
கிரிக்கெட்டில் ‘இந்திய வழிமுறைகளை’ உருவாக்குவது முக்கியம் என்று கூறிய கும்ப்ளே, இந்தியர் என்ற உணர்வை வளர்த்தெடுப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில இதழுக்கு அனில் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய வழியை உருவாக்குவது முக்கியமானது என்று கருதுகிறேன். ஸ்லெட்ஜிங் இந்தியப் பண்பாடு அல்ல என்று நான் கூறவரவில்லை, அல்லது ஸ்லெட்ஜின் வேறொருவரின் பண்பாடு என்றும் கூறவரவில்லை. ஒரு இந்திய உணர்வை ஏற்படுத்த வேண்டும் அதாவது ஒவ்வொருவரும் குடும்பத்தின் அங்கமாக உணர வேண்டும், ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதை அளிக்க வேண்டும்.
இந்தியப் பண்பாட்டில் உள்ள அனைத்து சிறந்த வழக்கங்களையும் கைகொண்டு நாம் என்னவாகப் பார்க்கப்பட வேண்டும் என்ற ரீதியில் பண்பாட்டின் நல்ல அம்சங்களை நம்மிடையே ஒன்றிணைத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்வோம். இதன் மூலம் நாம் எப்படி ஆட வேண்டும், எப்படி பயிற்சி செய்யவேண்டும், ஒரு இந்திய அணியாக நாம் எப்படிப் பார்க்கப்படவேண்டும் என்பதை உருவாக்க முயற்சி செய்கிறோம்.
இந்திய குடும்ப நடைமுறைகளின்படி மூத்தோர் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பது இன்றியமையாத ஒரு அம்சம். ஆனால் இங்கு திறந்த மனதுடன் அனைவரும் தாங்கள் நினைத்ததை பகிர்ந்து கொள்ளலாம். மூத்த வீரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கூட அதனை வெளிப்படையான தெரிவிப்பு மூலம் எளிதில் தீர்த்து வைக்கலாம். அதாவது மூத்தோர் பேச்சைக் கேட்பது நமது குடும்ப மதிப்பு, ஆனால் மறுக்கும் உரிமையும் வேண்டும். ஆனால் இவையெல்லாம் நாகரிகமான முறையில் அமைய வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
இப்போதைய தலைமுறையை எடுத்துக் கொண்டால் 10 நிமிடங்களுக்கு மேல் அறிவுரைகளைக் கேட்க மாட்டார்கள், ஆனால் இங்கு நமது இந்த அணி வீர்ர்கள் புதிய சிந்தனைகளுக்கு தங்கள் மனதை திறந்து வைத்திருந்ததைப் பார்க்கும் போடு ஆச்சரியமாகவே இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் பேச முடிந்தது.
இவ்வாறு கூறினார் அனில் கும்ப்ளே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT