Published : 16 Mar 2014 01:28 PM
Last Updated : 16 Mar 2014 01:28 PM

சீனாவின் லீ நா: அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவின் இன்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா அதிர்ச்சி தோல்வி கண்டார்.

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான லீ நா, தனது அரையிறுதியில் 6-7 (5), 3-6 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் லீ நாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள பிளேவியா, தனது இறுதிச்சுற்றில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை சந்திக்கிறார்.

அக்னீஸ்கா தனது அரையிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை சந்திக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x