Published : 16 Sep 2015 01:56 PM
Last Updated : 16 Sep 2015 01:56 PM
பெங்களூருவில் நடைபெறும் வங்கதேச ஏ அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.
இந்தியா ஏ தலைவர் உன்முக்த் சந்த் டாஸில் தோற்க, வங்கதேச ஏ அணியின் தலைவர் மோமினுல் ஹக் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.
மயங்க் அகர்வால், உன்முக்த் சந்த் தொடங்க, அங்கு டஸ்கின் அகமது, ஷபியுல் இஸ்லாம் தொடங்கினர், அதிரடி முறையில் தொடங்கிய உன்முக்த், மயங்க் அகர்வால் 5 ஓவர்களில் 44 ரன்களை விளாசினர். 4 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த உன்முக்த் அப்போது டஸ்கினிடம் அவுட் ஆனார்.
மணிஷ் பாண்டே (1), ரெய்னா (16), ஜாதவ் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 17-வது ஓவரில் இந்தியா ஏ 76/4 என்று ஆனது, ஆனால் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 56 ரன்கள் எடுக்க அவரும், சாம்சனும் இணைந்து ஸ்கோரை 125 ரன்களுக்கு எடுத்து சென்றனர், அகர்வால் 56 ரன்களுக்கு நசீர் ஹுசைன் பந்தில் சவுமியா சர்க்காரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 26-வது ஓவரில் இந்தியா ஏ 125/5 என்று தடுமாறியது.
ஆனால் அதன் பிறகு இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர்களான சஞ்சு சாம்சன், குர்கீரத் சிங் இணைந்து 15 ஓவர்களில் ஸ்கோரை 125 ரன்களிலிருந்து 227 ரன்களாக உயர்த்தினர். குர்கீரத் 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து அராபத் சன்னியிடம் வீழ்ந்தார்.
பிறகு ரிஷி தவண், சாம்சன் இணைந்து 8 ஓவர்களில் 78 ரன்களை விளாசினர். சஞ்சு சாம்சன் 76 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து அப்போது ஷபியுல் இஸ்லாமிடம் ஆட்டமிழந்தார். ஆனால் இந்தியா ஏ அணி 300 ரன்களைக் கடந்தது.
ரிஷி தவண் 34 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கரண் சர்மா 11 ரன்களை சேர்த்தார். வங்கதேச ஏ பந்து வீச்சு சரியாக அமையாதததால் வைடுகள் வகையில் 21 ரன்களுடன் உதிரிகளாக 28 ரன்கள் கிடைத்தது.
கடைசி 10 ஓவர்களில் 95 ரன்கள் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிவரும் வங்கதேச ஏ அணி 3 விக்கெட்டுகளை ஸ்ரீநாத் அரவிந்திடம் இழந்து 6 ஓவர்களில் 34 ரன்களை எடுத்து திணறி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT