Published : 18 Jan 2017 06:27 PM
Last Updated : 18 Jan 2017 06:27 PM
புனே ஒருநாள் போட்டியில் கோலியை விடவும் அதிவேகமாக ஆடி, அரிய ஷாட்களையும் ஆடிய கேதர் ஜாதவ், கோலியுடன் ஆடுவது பயனளிப்பது எவ்வாறு என்பதைப் பற்றி கூறியுள்ளார்.
இது குறித்து கேதர் ஜாதவ் கூறியதாவது:
நாம் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இதனால் இங்கிலாந்து பீல்டர்களை நெருக்கமாகவே அமைத்தனர், இதனால் களவியூகத்தில் நிறைய இடைவெளிகள் இருந்தது. பிட்சும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைய பவுண்டரிகள் எளிதானது.
மேலும் என்னுடைய இயல்பான பேட்டிங் அணுகுமுறையே எதிராளியை ஆட்கொண்டு ஆதிக்கம் செலுத்துவதே. அதனால் இந்த ஓட்டத்தில் ஆடினேன். 350 ரன்களை எடுத்தாக வேண்டும் இதனால் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டியதும் அவசியம்.
மேலும் கோலி இன்னொரு முனையில் பேட் செய்து கொண்டிருப்பது எனக்குச் சாதகமானது, காரணம் எதிரணியினரின் கவனம் முழுதும் அவரை நோக்கியே, அவரை வீழ்த்துவது பற்றியே இருக்கும் போது நம் மீது கவனம் இருக்காது.
எனவே கோலியுடன் ஆடும் போது நமக்கு பவுண்டரி பந்துகள் நிறைய கிடைக்க வாய்ப்புள்ளது. பவுலர்கள் நம் மீது அழுத்தம் கொடுக்க மாட்டார்கள், கவனம் முழுதும் கோலியின் மேலேயே இருக்கும், இது எப்போதும் கோலியுடன் ஆடுபவர்களுக்குச் சாதகமான ஒரு விஷயம், இதனைப் பயன்படுத்திக் கொண்டேன்.
இவ்வாறு கூறினார் ஜாதவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT