Last Updated : 10 Oct, 2014 07:01 PM

 

Published : 10 Oct 2014 07:01 PM
Last Updated : 10 Oct 2014 07:01 PM

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம்: பிசிசிஐ இணைச் செயலர் அதிருப்தி

டெஸ்ட் போட்டிகளில், குறிப்பாக அயல்நாட்டு மைதானங்களில் இந்திய அணியின் ஆட்டத்தை மேம்படுத்தினால் மட்டுமே கிரிக்கெட்டின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று பிசிசிஐ இணைச் செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அயல்நாட்டில் விளையாடிய கடைசி 15 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 11 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. லார்ட்ஸில் ஒரேயொரு வெற்றியைச் சாதித்தது. 3 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.

"டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வென்ற பிறகே இந்திய அணிக்கு தொடரை வெல்ல வாய்ப்புகள் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைத்தும் தவறாகப் போய் முடிந்தன. நம்மால் அந்த வெற்றிக்குப் பிறகு சிறப்பாக ஆட முடியவில்லை. நாம் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்று, திருத்திக் கொள்ள வேண்டும். அயல்நாடுகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் நம் அணியின் ஆட்டம் மேம்பட ஆவன செய்தாக வேண்டும்.

வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் நமக்கு மிகவும் முக்கியமானது. எனக்கு டெஸ்ட் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. பிசிசிஐ-க்கும் டெஸ்ட் போட்டிகள் பற்றிய கவலை உள்ளது.

திறமையுள்ள வீரர்களை அடையாளம் கண்டு பின்னணியில் வைத்திருக்க வேண்டும், முக்கிய வீரர்கள் காயமடையும் போது அவர்களை உடனடியாகப் பயன்படுத்தவேண்டும். மேலும் வீரர்கள் காயமடைவதைத் தடுக்கும் உத்திகளையும் நாம் வளர்த்தெடுப்பது அவசியம்.

இதற்காக நிறைய விஷயங்களை பரிசீலித்து வருகிறோம், உள்நாட்டு கிரிக்கெட்டில் தரத்தை உயர்த்துவது அதில் முக்கியமான ஒன்று, நல்ல பிட்ச்களை உருவாக்குவதிலும் இப்போது கவனம் செலுத்தி வருகின்றோம். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய நடுவர்கள் ஒருவர் கூட இல்லை. எனவே அந்த விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார் இணைச் செயலர் அனுராக் தாக்கூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x