Last Updated : 03 Sep, 2016 11:02 AM

 

Published : 03 Sep 2016 11:02 AM
Last Updated : 03 Sep 2016 11:02 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா, ஆன்டி முர்ரே 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ், 2-ம் நிலை வீரரான இங்கிலாந் தின் ஆன்டி முர்ரே ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸை எதிர் கொண்டார். இதில் முர்ரே 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-ம் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் வாவ்ரிங்கா 6-1, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலியின் அல்சான்ட்ரோவையும், 6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஹரேன் கச்னோவையும், 8-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டோமினிக் தியம் 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் லிதுவேனியாவின் ரிக்கர்ட்ஸ் பிரன்கிஸையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

306-வது வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ் 6-1, 6-0 என்ற நேர் செட்டில் 87-வது இடத்தில் உள்ள சகநாட்டை சேர்ந்த வானியா கிங்கை வீழ்த்தினார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செரீனாவின் 306-வது வெற்றியாக இது அமைந்தது. இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றி பெற்றிருந்த மார்ட்டினா நவ்ரத்திலோவாவின் சாதனையை சமன் செய்தார்.

6-வது இடத்தில் உள்ள வீனஸ் வில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜையும், 4-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரன்வந்த்ஸ்கா 7-6, 6-3 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் நவோமி பிராடியையும் தோற்கடித்தனர். 5-ம் நிநிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹலப் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் செக் குடியரசின் லூசி சபரோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x