Last Updated : 15 Oct, 2014 03:08 PM

 

Published : 15 Oct 2014 03:08 PM
Last Updated : 15 Oct 2014 03:08 PM

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது: ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கடும் சவால்களைச் சந்திக்கும் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்தியாவுக்கு தங்கள் அணி வரும்போது எத்தகைய பிட்ச்களை வழங்கி கடினமாக்கினார்களோ அதே போன்று இங்கு இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் ஷேன் வாட்சன்.

ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் பிட்ச் தயாரிப்பாளர்கள் நிச்சயம் எங்களுக்குச் சாதகமான பிட்சையே தயாரிப்பார்கள் என்று நம்பலாம், இந்தியாவில் எப்படி அந்த அணிக்குச் சாதகமாக பிட்ச் தயாரிக்கப்படுகிறதோ அப்படி, ஆகவே இந்திய அணிக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன.

இந்திய அணியில், குறிப்பாக பேட்டிங்கில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் இங்கு அவர்களுக்கு வித்தியாசமான சவால் காத்திருக்கிறது” என்றார்.

மேலும், தனக்கு தொடக்க வீரராகக் களமிறங்குவதே சிறப்பாக அமைகிறது என்று கூறிய வாட்சன், "அனைத்து கிரிக்கெட் ஆட்ட வடிவங்களிலும் தொடக்கத்தில் களமிறங்குவதையே நான் விரும்புகிறேன். அதாவது ஆட்டத்தின் சூழ்நிலைகள் எனது பேட்டிங் பாணியைத் தீர்மானிக்காத ஒரு நிலை தொடக்க விரர் நிலை எனவே அப்போதுதான் நான் சுதந்திரமாக விளையாடி வந்திருக்கிறேன்.

மாறாக தொடக்க வீரராக அல்லாமல் சற்றே பின்னால் களமிறங்கினால் சூழ்நிலையின் தாக்கன் எனது மனதை எதிர்மறை அணுகுமுறைக்கு இட்டுச் செல்கிறது. அது எனது ஆட்டத்தைப் பாதிக்கிறது” என்றார்.

டிசம்பர் 4-ஆம் தேதி பிரிஸ்பன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. மற்ற போட்டிகள் அடிலெய்ட் (டிச.12), மெல்பர்ன் (டிச.26), சிட்னி (ஜன.3) ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது. பெர்த்தில் இந்த முறை டெஸ்ட் போட்டி இல்லை. 4 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு ஆஸி, இங்கிலாந்து, இந்தியா விளையாடும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x