Published : 02 Aug 2016 03:04 PM
Last Updated : 02 Aug 2016 03:04 PM
ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு எதிராக முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணிக்கு திடீரென மணீஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நமன் ஓஜா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார் ஆனால் திடீரென மணீஷ் பாண்டே கேப்டன் என்று பயணத்துக்கு கிளம்பும் 2 நாட்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் ஓஜா, ஷாபாஸ் நதீம், விஜய் சங்கர், அகில் ஹெர்வாத்கர் ஆகியோருக்குப் பதிலாக யஜுவேந்திர சாஹல், மந்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட நால்வரும் விசாக்களுடன் தயாராக இருந்தனர், மேலும் ஜூலை 12 முதல் 17-ம் தேதி வரை பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் கழகத்தில் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
ஆனால் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட இந்த நால்வரும் அங்கு நடைபெறும் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் விளக்கொளியில் விளையாடப்படுகிறது.
ஓஜா இது குறித்து கூறியதாவது: “இந்தியா ஏ அணியில் தேர்வாளர்க்ள் 4 மாற்றங்கள் செய்துள்ளனர். நான் 4 நாள் போட்டிகளுக்குத்தான் செல்கிறேன்” என்றார், ஆனால் இதற்கு காரணம் என்ன என்பதை பிசிசிஐ இதுவரை தெரிவிக்கவில்லை.
கேதர் ஜாதவ் முத்தரப்பு ஒருநாள் தொடர் முடிந்த பிறகு நாடு திரும்புவார், 4 நாள் போட்டிகளுக்கான அணியில் இவர் இல்லை.
ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. பயிற்சியாளர் ராகுல் திராவிட் தனது தாயார் உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அணியுடன் பிற்பாடு இணைகிறார்.
இந்தியா ஏ ஒருநாள் அணி வருமாறு:
மணிஷ் பாண்டே, பைசல் பாசல், மந்தீப் சிங், ஷ்ரேயஸ் ஐயர், கருண் நாயர், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், தவல் குல்கர்னி, ஜெய்தேவ் உனட்கட், பாரிந்தர் ஸரண், யஜுவேந்திர சாஹல், சஞ்சு சாம்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT