Published : 25 Oct 2014 03:08 PM
Last Updated : 25 Oct 2014 03:08 PM
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்தது.
மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காதது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் வீரர் கோகேவிடம் பந்து செல்ல, அவர் அதை லாவகமாக 6 யார்ட் பாக்ஸுக்குள் கடத்தினார். அப்போது மும்பை கோல் கீப்பர் சுப்ரதா பால் முன்னேறி வந்து தடுக்க முயன்றார். அதற்குள் அங்கு வந்த நார்த் ஈஸ்ட் வீரர் டோங்கா துல்லியமாக கோலடித்தார்.
இதன்பிறகு 75-வது நிமிடத்தில் மும்பை தடுப்பாட்டக்காரர் பாவெல் 2-வது யெல்லோ கார்டை பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இதனால் மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இதனிடையே 90-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி 2-வது கோலை அடித்தது. அந்த அணியின் ஜேம்ஸ் கீன் வலதுபுறத்தில் இருந்து கொடுத்த பாஸில் இடது காலால் கோலடித்தார் பெலிப்.
இன்றைய ஆட்டம்
டெல்லி-சென்னை
இடம்: டெல்லி நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT