Last Updated : 23 Oct, 2014 03:02 PM

Published : 23 Oct 2014 03:02 PM
Last Updated : 23 Oct 2014 03:02 PM

செல்ஸீ அணியின் கால்பந்து வீரர் பெயரில் மோசடி செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து அணி செல்ஸீயின் வீரரான கயே ககுதா பெயரில் ஏமாற்றித் திரிந்த மற்றொரு கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேடி அபாலிம்பா (25) என்ற இவரும் கால்பந்து வீரர்தான். இவர் டெர்பி கவுண்டிக்காக முன்பு விளையாடியவர். வாரம் 20,000 பவுண்டுகள் அப்போது அபாலிம்பா சம்பாதித்தார். ஆனால் இவரது கவனம் கால்பந்தாட்டத்தில் இல்லை. ஒழுக்கமற்று திரிந்ததால் இவரது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் செல்ஸீ வீரர் கயேல் ககுதாவின் ஏஜெண்ட் என்று கூறி மேடி அபாலிம்பா சிலபல வசதிகளை அனுபவித்துள்ளார். பிறகு கயேல் ககுதாவே நான் தான் என்று ஏமாற்றியுள்ளார்.

இவர் கயேல் ககுதா பெயரில் ஆடம்பர, நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறார். யு.கே.யின் மிகப்பழமையான, ஆனால் 2-வது மிகப்பெரிய செயின் ஸ்டோரான செல்ஃப்ரிட்ஜஸில் 20,000 பவுண்டுகள் வரை ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வாங்கித் தள்ளியுள்ளார்.

மேலும், பிறரது கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடி அதனைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் குவித்துள்ளார். இவ்வளவு ஏன்? ஹெலிகாப்டர் ஒன்றையும் வாடகைக்கு எடுத்துள்ளார். எல்லாம் கயேல் ககுதா பெயரில்! இந்த ஹெலிகாப்டரில் ஒருமுறை 4 பெண்களை மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தின் லாக்கர்களிலிருந்து ஏகப்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்ட் விவரங்களை மாற்றுச் சாவி உதவியுடன் உடைத்துத் திருடியுள்ளார்.

ஜூன் 2014-ல் மான்செஸ்டர் நைட் கிளப் ஒன்றிற்குச் சென்று 2,600 பவுண்டுகள் விலையுள்ள ஷான்பேன் மதுபானத்தை வாங்கிவிட்டு, பர்ஸை லிமோசின் காரில் வைத்து விட்டேன் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார்.

மொத்தம் 10க்கும் மேற்பட்ட குற்றங்களில் இவர் ஈடுபட்டதாக கோர்ட்டில் ஒப்புக் கொண்டார். இவரை மான்செஸ்டர் போலீஸ் அவரது குடியிருப்பில் கைது செய்தனர்.

மொத்தத்தில் ககுதா பெயரில் இவர் 1,63,000 பவுண்டுகள் மோசடி செய்துள்ளார். இவருக்கு கோர்ட் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x