Published : 12 Apr 2017 05:24 PM
Last Updated : 12 Apr 2017 05:24 PM
வங்கதேசத்தில் நடைபெற்ற 2-ம் டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆத்திரமடைந்த பவுலர் ஒருவர் 4 பந்துகளில் 92 ரன்களை விட்டுக் கொடுத்து எதிரணியை வெற்றி பெறச் செய்த விசித்திர சம்பவம் வங்கதேச கிரிக்கெட் லீக் வட்டாரங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆக்சியம், லால்மேட்டியா அணிகளுக்கு இடையே 50 ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் லால்மேட்டியா அணியின் தொடக்க பவுலர் சூஜன் மஹ்மூத் நடுவர் மேல் உள்ள ஆத்திரம் தாங்காமல் 4 பந்துகளில் 92 ரன்களை விட்டுக் கொடுத்து போட்டியை வேண்டுமென்றே தோற்றார், அதாவது எதிரணி வெற்றி பெறுவதை கேலிக்கூத்தாக மாற்றினார்.
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் நாளிதழுக்கு லால்மேட்டியா அணி தலைமைச் செயலர் அத்னன் ரஹ்மான் திபான் கூறும்போது, “முதலில் டாஸில் ஆரம்பித்தது. எங்கள் அணி கேப்டன் சுண்டி விடப்பட்ட நாணயம் எப்பக்கம் விழுந்தது என்பதைப் பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால் எங்களை முதலில் பேட் செய்ய அழைத்தனர். நடுவர்கள் மிக மோசமாக எங்கள் அணிக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கினர். என் அணி வீரர்கள் மிகவும் இளம் வயதினர் அனைவரும் 17-18 வயதுடையவர்கள்தான். அநீதியைப் பொறுக்க மாட்டாமல் 4 பந்துகளில் 92 ரன்களை கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளுங்கள் என்று செய்து விட்டனர்” என்றார்.
நடுவர் மோசடியால் லால்மேட்டியா அணி 14 ஓவர்களில் 88 ரன்களுக்கு சுருண்டது.
பிறகு ஆக்சியம் அணி இலக்கை விரட்ட களமிறங்கிய போது முதல் ஓவரை வீசினார் சூஜன் மஹ்மூத் 13 வைடுகளை வீசினார் அனைத்தும் பவுண்டரிக்குச் செல்ல 5 ரன்கள் வீதம் 65 ரன்கள் வந்தது. 3 நோபால்களை வீசினார் அதன் மூலம் 15 ரன்கள் 4 பந்துகளைத்தான் ஒழுங்காக வீசினார் அதில் ஆக்சியம் பேட்ஸ்மென் ரஹ்மான் 12 ரன்களை அடிக்க 4 பந்துகளில் 88 ரன்கள் இலக்கு ஒன்றுமில்லாமல் ஆகி 92 ரன்கள் எடுத்து ஆக்சியம் வெற்றி பெற்றது.
இந்தச் சம்பவம் குறித்த நடுவர் அறிக்கைக்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல் தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 77 என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT