Published : 21 Oct 2014 12:30 PM
Last Updated : 21 Oct 2014 12:30 PM
டெல்லி மாநில கிரிக்கெட் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இமாசலப் பிரதேசத்தில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதில் விளையாடும் 15 பேர் கொண்ட டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்க கம்பீர் கடுமையாக போராடி வருகிறார். இனி நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவரால் அணியில் இடம்பிடிக்க முடியும். எனவே தனக்கு மீண்டும் கிடைத்த டெல்லி அணி கேப்டன் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்.
டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு மூத்த வீரர் வீரேந்திர சேவாக்கும் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடுமையாக முயற்சித்து வருகிறார். அவர் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட காத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT