Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளது கர்நாடகம்.
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகாராஷ்டிரம் தனது முதல் இன்னிங்ஸில் 305 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகம் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 158 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் குவித்திருந்தது.
4-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய கர்நாடகம் 171.1 ஓவர்களில் 515 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் 131, கணேஷ் சதீஷ் 117 ரன்கள் குவித்தனர். முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய மகாராஷ்டிர அணியில் தொடக்க வீரர்கள் காடிவாலே 9, விஜய் ஸோல் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு வந்த பாவ்னே 61 ரன்கள் சேர்க்க, கேதார் ஜாதவ் சதமடித்தார். ஜாதவ் 135 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் குவித்தார்.
4-வது நாள் ஆட்டநேர முடிவில் மகாராஷ்டிரம் 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது.
தற்போதைய நிலையில் மகாராஷ்டிரம் 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ஓர் நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளது.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மகாராஷ் டிரத்தை விரைவாக வீழ்த்தி வெற்றி பெற முயற்சிக்கும் கர்நாடகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT