Published : 06 Jul 2016 04:48 PM
Last Updated : 06 Jul 2016 04:48 PM
வரி ஏய்ப்பு வழக்கில் அர்ஜெண்டின, பார்சிலோனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸிக்கு பார்சிலோனா கோர்ட் 21 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்கேவுக்கும் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 விதமான வரி ஏய்ப்பு செய்ததாக கோர்ட் கூறியதோடு, இந்தத் தீர்ப்பை ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் ஸ்பானிய சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை விதிப்பு சோதனைக்கால விதிமுறைகளின் கீழ் வருவதால் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறை செல்ல வேண்டியதில்லை.
மேலும் மெஸ்ஸிக்கு 2 மில்லியன் யூரோக்கள் (2.21 மில்லியன் டாலர்கள்), அவரது தந்தைக்கு 1.5 மில்லியன் யூரோக்கள் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது பார்சிலோனா நீதிமன்றம்.
லயோனல் இமேஜ் ரைட்ஸ் மீதான வரிகளை மெஸ்ஸி ஏமாற்றியதாக கேட்டலோனியா நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் தனக்கு வரி, பண விவகாரம் எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
ஸ்பெயினில் இத்தகைய சிறைத்தண்டனை தீர்ப்புகள் ரத்து செய்யப்படுவது வழக்கமே என்பதாலும் வன்முறையற்ற, 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத்தண்டனைகளில் பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்டோர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்காது என்று ஸ்பானிய சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT