Last Updated : 30 Mar, 2017 10:18 AM

 

Published : 30 Mar 2017 10:18 AM
Last Updated : 30 Mar 2017 10:18 AM

விராட் கோலி சிறுபிள்ளைத்தனமானவர்: ஆஸ்திரேலிய ஊடகங்கள் சாடல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இந்த தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் புகழை சீர்குலைக்கும் வகையில் ஆஸ்தி ரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையிலும் கோலியை அவர்கள் விடுவதாக தெரியவில்லை.

தர்மசாலாவில் நேற்று முன்தினம் கடைசி டெஸ்ட் முடிவடைந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விராட் கோலி, ஆஸ்திரேலிய வீர்ர்களுடனான நட்பு மீட்க முடியாத அளவுக்கு இந்தத் தொடரில் சேதம் அடைந்து விட்டது. இனி அவர்கள் நண்பர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விராட் கோலியின் இந்த கருத்தை தொடர்ந்து ஆஸ்தி ரேலிய ஊடகங்கள் வழக்கம் போல அவரை வசைபாடி உள்ளன. சிட்னியிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் என்ற பத்திரிகை, தொடர் முடிவடைந்த தும் கை குலூக்கிய கோலி அதில் இருந்து முன்னேறி சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் குழந் தைத் தனமாக நடந்து கொண்டுள் ளார் என தெரிவித்துள்ளது. மேலும் கோலியை ஈகோ பிடித்தவர் எனவும் வர்ணித்துள்ளது. மற்றொரு தலைப்பு செய்தியில் கோலி கிளாஸ் வீரர் இல்லை என குறிப்பிட்டுள்ளது. தி ஆஸ்திரேலியன் பத்திரிகையில் கட்டுரை எழுதும் பீட்டர் லாலோர்,

‘‘இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாட்டு உணர்வுடன் செயல்படவில்லை என்பது, ஸ்டீவ் ஸ்மித் மது அருந்தலாம் என அழைத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்ததன் மூலம் உறுதியாகி உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

ஹரால்டு சன் என்ற பத்ரிகையில் நிரூபர் ரஸ்ஸல் கோல்டு எழுதி உள்ள கட்டுரையில்,

‘‘விராட் கோலி மன்னிப்பு என்ற வார்த்தையை கூற வேண்டும். முரளி விஜய்யை திட்டியதற்காக ஸ்மித் மன்னிப்பு கேட்டுள்ளார்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x