Last Updated : 04 Dec, 2014 03:42 PM

 

Published : 04 Dec 2014 03:42 PM
Last Updated : 04 Dec 2014 03:42 PM

உலகக் கோப்பை உத்தேச இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: சேவாக், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட் டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட் டுள்ளது. அதில் கடந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த மூத்த வீரர்களான வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெறவில்லை.

கடந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்களில் கேப்டன் தோனி, விராட் கோலி, ரெய்னா, அஸ்வின் ஆகிய 4 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்­போ­தைய நிலை­யில் நல்ல பார்­மில் இருக்­கும் இளம் வீரர்­க­ளுக்கு சந்­தீப் பாட்­டீல் தலை­மை­யி­லான தேர்­வுக்­கு­ழு­வி­னர் முன்­னு­ரிமை கொடுத்­துள்­ள­னர். விதி­மு­றைப்­படி உத்­தேச அணி­யில் இடம்­பெ­றா­த­வர்­க­ளும் உல­கக் கோப்பை போட்­டிக்­கான இறுதி அணி­யில் (15 பேர் கொண்­டது) சேர்க்­கப்­ப­ட­லாம். ஆனா­லும் சேவாக், கம்­பீர், யுவ­ராஜ் சிங், ஹர்­ப­ஜன், ஜாகீர்­கான் ஆகி­யோர் இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு மிக­வும் குறை­வா­கும். 15 பேர் கொண்ட இறுதிப் பட்­டி­யலை ஐசி­சி­யி­டம் சமர்ப்­பிக்க கடைசி நாள் ஜன­வரி 7-ம் தேதி ஆகும்.

தியோதர் டிராபி போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் மனோஜ் திவாரியும், ஐபிஎல், உள்ளிட்ட பல போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி யதன் மூலம் மணீஷ் பாண்டேவும் உத்தேச அணியில் இடம்பிடித்துள்ளனர்.

கடைசிக் கட்ட ஓவர்களை சிறப் பாக வீசியதன் அடிப்படையில் அசோக் திண்டா வாய்ப்பு பெற் றுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் உள்ளிட்ட 7 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த உலகக் கோப்பையில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, முதல்முறையாக உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெறவுள்ளார்.

கேப்டன் தோனி, விருத்திமான் சாஹா, சஞ்ஜூ சாம்சன், ராபின் உத்தப்பா என 4 விக்கெட் கீப்பர் கள் இடம்பெற்றுள்ளனர். அதனால் தமிழக விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சீசனில் கர்நாடக அணிக்கு தலைமை வகித்த வினய் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை.

அணி விவரம் - பேட்ஸ்மேன்கள்

ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கேதார் ஜாதவ், மனோஜ் திவாரி, மணீஷ் பாண்டே, முரளி விஜய்.

வேகப்பந்து வீச்சாளர்கள்

இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், தவல் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, மோஹித் சர்மா, அசோக் திண்டா.

சுழற்பந்து வீச்சாளர்கள்

அஸ்வின், பர்வேஸ் ரசூல், கரண் சர்மா, அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, அக் ஷர் படேல், குல்தீப் யாதவ்.

விக்கெட் கீப்பர்கள்

எம்.எஸ்.தோனி, ராபின் உத்தப்பா, சஞ்ஜூ சாம்சன், விருத்திமான் சாஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x