Published : 05 Dec 2013 02:35 PM
Last Updated : 05 Dec 2013 02:35 PM

ஆஷஸ் 2-வது டெஸ்ட் முதல் நாள்: ஆஸி. 273 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 91 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஜர்ஸ் 72 ரன்களையும், வார்னர் 29 ரன்களையும் சேர்த்தனர்.

வாட்சன் 51 ரன்களையும், பெய்லி 53 ரன்களையும் எடுத்தனர்; ஸ்மித் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மைக்கேல் கிளார்க் 48 ரன்களையும், ஹிதின் 7 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் பிராட் 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ஸ்வான் மற்றும் பனேசர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x