Published : 20 May 2017 02:20 PM
Last Updated : 20 May 2017 02:20 PM
கிரிக்கெட் பிரத்யேக இணையதளமான ஈ.எஸ்.பி.என். கிரிக்இன்போ இணையதளம் அனைத்துகால சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளது, இந்த அணிக்கு தோனியைக் கேப்டனாகத் தேர்வு செய்துள்ளது, அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லை.
6 வாரங்கள் வாசகர் வாக்களித்ததன் படி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் உட்பட 17 பேர் கொண்ட குழு இந்த அணியை தேர்வு செய்துள்ளனர்.
அனைத்துகால சிறந்த ஐபிஎல் அணி:
தோனி (கேப்டன், வி.கீ.), கிறிஸ் கெய்ல், விரேந்திர சேவாக், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, டிவைன் பிராவோ, சுனில் நரைன், அஸ்வின், புவனேஷ் குமார், லஷித் மலிங்கா
ஏ.பி.டிவில்லியர்ஸ் 12-வது வீரர் என்று இந்தக் குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.
6 பேட்ஸ்மென், ஒரு ஆல்ரவுண்டர், 4 பந்து வீச்சாளர்கள் என்ற முறையில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் இந்த அணிக்காக 31 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர், இதில் 14 அயல்நாட்டு வீரர்கள் அடங்குவர். இந்த 14 அயல்நாட்டு வீரர்களில் 4 பேரை குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.
தோனி ஏன் கேப்டன்?
பல்வேறு காரணங்களினால் இந்த அணியை தோனிதான் வழிநடத்த வேண்டும் என்று பெரிய அளவில் ஆதரவு இருந்தது என்றும் 9 சீசன்களில் வெற்றிகரமான கேப்டனாக தோனி திகழ்ந்திருக்கிறார் என்பதும் முடிவு செய்தன, இந்த முடிவை விவாதிப்பது கடினம் என்கிறது ஈ.எஸ்.பி.என்-கிரிக் இன்போ இணையதளம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT